ஒரே மாலையில் 235 பேர் பலி.. எகிப்தில் என்ன நடக்கிறது.. வீடியோ

  • 7 years ago
எகிப்தில் உள்ள மசூதி ஒன்றில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 235 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை இந்த தீவிரவாத தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது. நேற்று மாலை நிலைகுலைந்த அந்த தீபகற்பம் இன்னும் இயல்புநிலைக்கு திரும்பவில்லை. இந்த ஒரு தாக்குதல் எகிப்த் வரலாற்றில் இல்லாத பல மாற்றங்களை அந்த நாட்டில் ஏற்படுத்தி இருக்கிறது. மொத்த எண்ணெய் வள நாடுகளும் நினைத்து பார்க்க முடியாத தாக்குதல் என்று இது குறிப்பிடப்படுகிறது. இந்த ஒரு தாக்குதல் அங்கு குறைந்தது 10 வருடங்களுக்காவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனப்படுகிறது.

எகிப்தின் சீனாய் தீபகற்பத்தில் உள்ள மசூதி ஒன்றில் தான் அந்த தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. சினாய் பகுதியில் இருக்கும் 'பிர் அல்-அபேத்' என்ற மக்கள் அதிகம் உள்ள இடத்தில்தான் அந்த மசூதி இருக்கிறது

Recommended